உலகில் மிக நீளமான நதி நைல். ஆனால் தண்ணீரின் அளவைப் பார்த்தால் அமேசான் தான் பெரிய நதி. இது1499 ல் தான் கண்டுபிடிக்கப் பட்டது. அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் , நிமிடத்துக்கு, 28,000,000,000 காலன் நீரை கடலில் கொட்டுகிறது. கடற்கரையிலிருந்து சுமார்,1 ,600 கி,மீ தூரம் வரை நல்ல நீர்தான். ஆண்டிஸில் பிறந்து, அட்லாண்டிக்கில் சங்கமம் ,அமேசான் ஆற்றில் 1,100 க்கும் மேற்பட்ட துணை ஆறுகள் நீரைக் கொண்டுவந்துகொட்டுகின்றன.உகயாலி, மாரனோன் என்ற துணையாறுகள் பெரு வி ன் கடற்கரையில் இணையாக ஓடி பிரேசிலின் அருகே ஒன்றாக கலக்கின்றன.அதன் பிறகே இதன் பெயர் அமேசான் நதி. இதில் இக்யூடோஸ் என்ற பெரிய துறைமுகம் உள்ளது. அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.
பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
கழிமுகம்
இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும்.