Sunday, August 15, 2010

அமேசான்

உலகில் மிக நீளமான நதி நைல். ஆனால் தண்ணீரின் அளவைப் பார்த்தால் அமேசான் தான் பெரிய நதி. இது1499 ல் தான் கண்டுபிடிக்கப் பட்டது. அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் , நிமிடத்துக்கு, 28,000,000,000 காலன் நீரை கடலில் கொட்டுகிறது. கடற்கரையிலிருந்து சுமார்,1 ,600 கி,மீ தூரம் வரை நல்ல நீர்தான். ஆண்டிஸில் பிறந்து, அட்லாண்டிக்கில் சங்கமம் ,அமேசான் ஆற்றில் 1,100 க்கும் மேற்பட்ட துணை ஆறுகள் நீரைக் கொண்டுவந்துகொட்டுகின்றன.உகயாலி, மாரனோன் என்ற துணையாறுகள் பெரு வி ன் கடற்கரையில் இணையாக ஓடி பிரேசிலின் அருகே ஒன்றாக கலக்கின்றன.அதன் பிறகே இதன் பெயர் அமேசான் நதி. இதில் இக்யூடோஸ் என்ற பெரிய துறைமுகம் உள்ளது. அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.

பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

கழிமுகம்
இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும்.














































392096364_cd530ea297_b.jpg









Thursday, August 12, 2010

Olympic Tower 2016 - Rio de Janeiro

Olympic Tower 2016
Rio de Janeiro
~~~~~~~~~~~~~~~~~~~~~



This vertical structure will be placed in Cotonduba Island.  It will be both a observation Tower , and a welcome sign  for the visitors arriving by air and by  Sea at Rio de Janeiro ,  where the Olympic Games 2016  will take place.  The project is from Zurique, and utilizes solar energy during  the day with its solo Power panels, to pump the sea water as seen in the model.
The movement of the water will be also utilized to turn  the turbines And produce the power to work the system  at night time.

 In the Solo City Tower is the Cafe anfiteatre, auditórium, shops etc. E lifts will take the visitors to the top,  Where the view will be fantastic, and bungee jumping will have a special platform.













Sunday, August 8, 2010


WORLD'S EASIEST QUIZ


(Passing requires 4 correct answers) NO CHEATING!

1. How long did the Hundred Years' War last?

2. Which country makes Panama hats?

3. From which animal do we get cat gut?

4. In which month do Russians celebrate the October Revolution?

5. What is a camel's hair brush made of?

6. The Canary Islands in the Pacific are named after what animal?

7. What was King George VI's first name?

8. What color is a purple finch?

9. Where are Chinese gooseberries from?

10. What is the color of the black box in a commercial airplane?

Remember, you need 4 correct answers to pass.

Check your answers below.






*


*


*






*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*






*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


































ANSWERS TO THE QUIZ
1. How long did the Hundred Years War last? 116 years
2. Which country makes Panama hats? Ecuador
3. From which animal do we get cat gut? Sheep and Horses
4. In which month do Russians celebrate the October Revolution? November
5. What is a camel's hair brush made of? Squirrel fur
6. The Canary Islands in the Pacific are named after what animal? Dogs
7. What was King George VI's first name? Albert
8. What color is a purple finch? Crimson
9. Where are Chinese gooseberries from? New Zealand
10. What is the color of the black box in a commercial airplane? Orange
 What do you mean, you failed? Me, too.

Monday, August 2, 2010

கரோனரி ஆஞ்ஜியோகிராம்.

மரணத்தை முன்கூட்டியே காட்டிக் கொடுக்கும் கருவி.

மரணத்தை முன்கூட்டியே காட்டிக் கொடுக்கும் கரோனரி ஆஞ்ஜியோகிராம்

மனிதனுக்கு உயிர்வாழ இதயத்துடிப்பு தேவை. இதயம் துடிக்கச் சக்தி தேவை; இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த சக்தி, இதயத்தின் இடது கீழறையிலிருந்து வெளியேறி, அயோட்டா என்ற மகா தமனி மூலம் வெளியேற்றப்படுகிறது. அப்போது, அயோட்டா ஆரம்ப பகுதியிலுள்ள கரோனரி சைனஸ் என்ற பகுதியிலிருந்து ஆரம்பமாகும் மூன்று கரோனரி ரத்தக்குழாய்கள் மூலம் இதயம், வேண்டிய ரத்தத்தை பெறுகிறது.
இதயத்துடிப்பு
இதயம் துடித்து, அதன் வேலையை செய்ய, அதாவது இடது அறையிலிருந்து ஐந்து லிட்டர் ரத்தம் நிமிடத்திற்கு வெளியேற்றப்படுகிறது. இந்த துடிப்புக்கு ரத்தம் தேவை. இந்த ரத்த ஓட்டம் குறைந்தாலோ? நின்றாலோ? வேதனையும், துயரமும் தான் வரும். சோதனைக் காலம் துவங்கி விட்டது.

மாரடைப்பு, திடீர் மரணம் என்று மனிதனை அழித்து விடுகிறது. இதனால், 25 வயது முதல் 60 வரை, குடும்பத் தலைவன் உயிர் எவ்வளவு முக்கியத் தேவை. குடும்பத்தின் வாழ்வாதாரமே, அந்த வருவாய் ஈட்டும் ஜீவனால் தானே. அப்படிப்பட்ட இளம், நடுத்தர, மேல் வயது குடும்பத் தலைவர்களை காப்பாற்றி, அந்த குடும்பத்தை சோதனையிலும், துயரத்திலும், துன்பத்திலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு, இதய நோய் நிபுணருக்குள்ளது. குடும்பத் தலைவனின் நலனில், அவளுடைய மனைவி, மக்கள் நாட்டம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர் வருமானம் தான் தங்களை காப்பாற்றுகிறது என்ற நினைவு இருக்கட்டும்.

உயிர் வாழ துடிப்பு

அரசியல்வாதிகள், தனது உடலை மாதம் மாதம் பரிசோதித்து, இதயத்தைப் பாதுகாக் கின்றனர். தான் லஞ்ச ஊழலில் கொள்ளையடித்தப் பணத்தை அனுபவிக்க சர்க்கரை, ரத்த கொதிப்புடன் போராடி உயிர் வாழ துடிக்கின்றனர். ஒரு குடும்பத் தலைவன், குடும்ப உறுப்பினர்கள் நலத்திற்காக, வருடம் ஒருமுறையாவது இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது. இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

மவுனமான மாரடைப்பு: இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.

இதை முடிவு செய்வது இதயநோய் நிபுணர் அல்லது அவர் ஆலோசனையில் சேர்ந்து, அவரது ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்க வேண்டும். காரணம், தேவையில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுபவமில்லாத மருத்துவர்கள் சேர்க்கப்பட்டால், பணம் விரயம், நல்ல மருத்துவ சேவையும் கிடைக்காது. இதயநோய் நிபுணர், குறிப்பாக, ஊருருவல் வல்லுனர்களால் மாரடைப்பு, மார்பு வலிக்கு காரணமான கரோனரி குழாய் அடைப்பை சரி செய்ய இவர்களால் தான் முடியும். அதாவது, முழுமையான சிகிச்சை கொடுக்க முடியும்.

மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லையென்றால், தேவையில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.

வேறுபாடு என்ன?

ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம். அனுமானமாக அடைப்பை காட்டும்.

எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.

கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.

மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.

யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC)

1) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை.

2) மூச்சுத் திணறல், இதய பம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.

3) படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.

4) மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.

5) ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல்.

மேற்கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும். சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty) ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும்.

அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்பவர், அதிக எடை உள்ளவர்கள்.

ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.

இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர்.

வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்

திடீர் மரணம்

குடும்பத்தினரை வேதனையும், சோதனையுமாக்கி, குடும்பத்தினர் மீது கல்லை போடுவதற்கு சமம். தினம் தினம் பொய் பேசி, மனைவிகளுக்கு பிள்ளைகளின் நலத்திற்காக தனது இதயத்தை மாதா மாதம் பரிசோதனை செய்து, மக்கள் தலையில் கல்லைப் போட்டு கொடுமைப்படுத்துகிற அரசியல்வாதிகளை பார்த்தாவது நடுத்தர மக்கள், குறிப்பாக உணரப் பட்டவர்களே இந்த பரிசோதனைகள் செய்து, மாரடைப்பு திடீர் மரணத்தை தடுக்க பாருங்கள்.

யோக, தியானம், நடைபயிற்சி, தனிமனித ஒழுக்கம், உணவு ஒழுக்கம், இவைகள் இருந்தால் இதய நோயை தடுக்கலாம். இனிய தமிழ் மக்களுக்கு வரும் நாட்களில், நலமுடன் வாழ, உங்களுடன் மறைந்து தாக்கும் ரத்த விரோதியான, மாரடைப்பு மரணத்தை தடுத்து வாழ எனது வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்.

மக்கள் கவனத்திற்கு சில  ஆலோசனைகள்

கடந்த 40 ஆண்டுகால, அரிய பல முன்னேற்றங்கள் கொண்ட துறை இதயநோய் துறை. காரணம், திடீர் மரணம் என்ற பயம். இ.சி.ஜி., எக்கோவில் ஆரம்பித்த பரிசோதனைகள் இன்று டி.எம்.டி., எக்கோ, லிபிட் ப்ரொபைல், கரோனரி ஆஞ்ஜியோகிராம், பை-பாஸ் சர்ஜரி ப்ரோபைல் இதய மாற்று ஆபரேஷன், 64, 120 சிலைஸ் ஆஞ்சியோ இதய நியூக்ளியர் பரிசோதனை தானியம் ஸ்டெசி எலக்லோ பிசியலாஸ்கள் பரிசோதனை என்று வளர்ந்து, மாரடைப் புக்கு பை-பாஸ் சர்ஜரிக்கு பதிலாக இன்று இரண்டு மூன்று ஸ்டென்ட் சிகிச்சை முறை பரவலாகி விட்டது. இந்த சிகிச்சை, பல ஸ்டென்ட் சிகிச்சை செய்ய பல லட்சங்கள். இதை கடன் வாங்கி, நகைகள், வீடு விற்று, ஏழைகள், நடுத்தர மக்கள் செய்ய வரும்போது வேதனை அளிக்கிறது. இவ்வளவு பணமும் ஸ்டென் கம்பெனி, மருத்துவமனைக்கு செல்கிறது. இதனால், இந்த ஸ்டென்ட் சிகிச்சை செய்வதை நிறுத்தலாமா என்று தோன்றுகிறது. தனிமனித ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி தியானம், யோகா, சுத்தமான சிந்தனை. இவைகள் இதய நோயைத் தடுக்கும்.

நன்றி : பேராசிரியர் டாக்டர். அர்த்தநாரி




வாழ்வது ஒருமுறை

வாழ்த்தட்டும் தலைமுறை

வாழ்க வளமுடன்

Sunday, August 1, 2010

பழங்கால விமான இயல் (Aviation in ancient India).

நாரதர் கண்டுபிடித்த - கையாண்ட- விமானம்.  






வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது,

அயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா? அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா? அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றம் சரித்திரக் குறிப்புகளில் உண்டா? என்று கேட்டார்,

ராமாயணத்தில் இலங்கையின் அரசன் குபரனோடு போர் புரிந்து அவனது புஷ்பக விமானத்தை கைப்பற்றிய விதமும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறி இலங்கை வேந்தன் பல உலகங்களை வெற்றி கொண்டதையும் அதே போன்று மஹாபாரதத்தில் பாசுபதாஸ்திரத்தை பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற காண்டீபன் ஒரு விசித்திரமான பறக்கும் வாகனத்தில் ஏறி தேவலோகம் மற்றும் பல உலகங்களுக்கு சென்று வந்ததைப் பற்றியும்குறிப்புகள் இருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினேன்






எனது பதிலால் அவர் ஓரளவு திருப்தி அடைந்தாலும் அந்த பதில். எனக்கு அவ்வளவாக திருப்திகரமாக தோன்றவில்லை, எனவே பூமி வாசிகளின் அயல்கிரக பயணத்தைப் பற்றி ஆராய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது.

பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன, இதில் பெரும்பாலனவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கி விடுகிறோம்

இந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்து இருக்கின்றோம், புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்யமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன,

அமெரிக்கா  அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, இந்தப்படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது,







ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது,

இதே போன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்யககூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்
இது அந்தக்கால அஸ்த்திர வல்லுநர்கள் அணு ஆற்றலை பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது,
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை
மாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி எஞ்சின். மின்சாரம். வயர்லெஸ் ஆகியவவைகள் வேதகாலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாக தெரிந்து இருந்தது, வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம், அவர்கள் கண்டுபிடித்து கையாளத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்,
மாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கை வாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல, மிகச்சிறந்த ஆராயச்சியாளர் வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர் எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் நமது வேதங்களிலும் வெறுமனே  இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை, விவசாயம் ரசாயனம் வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறியுள்ளார்கள். ருக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்யாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நம் இஷ்டப்படி ஒட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது

வேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன, ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை

ஷப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறைப்பற்றியும் அவைகளின் செயல்திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார், அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் “சக்தி சூக்தம்” என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் “கௌதாமினி காலா” என்ற நூலும் ஷக்கானந்தரின் “வாயுதத்துப் பிரகரணம்” நாரதரின் “வைஸ்வனா தந்திரம்” மற்றும் “ஆகாச தந்திரம்” போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் “விமானச் சந்திரிகா” “யந்திர கல்பம்” “யானபிந்து சேதாயன” “பிரதிபிகா வியோமயானர்ஹா” “பிரகாலம்” ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்ககள் பற்றி விரிவாக கூறுகிறது,


இதில் சிலவற்றை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதாலேயே பூமிவாசிகளின் அயல்கிரக பயணம் உண்மைதான் என்பதை உறுதியுடன் புரிந்து கொள்வீர்கள்,

மேலும் இதில் ஒரு விந்தையான உண்மையையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ். மகிரிஷி இரண்டு அத்யாயங்களில் விரிவாக கூறுகிறார்,

விமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறவது இன்றும் பொருந்தும் அல்லவா,
இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்






1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது,

2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்,

3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாக கொண்டு இயக்கக் கூடிய விமானம்,

4. கிதோகமா : சிகி. சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெறும்  எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்,

5.ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்,

6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கிவரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்,

7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய. பாத்ரா. ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக கூடிய விமானம்,

8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்,

இது தவிர “ஷக்டிங்கர்ப்பம்”, “விக்யுதம்”. “துருபதம்” “குண்டலிகமும்” போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்


இன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம். லோபகர்ப பிரசரணம். அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலேயே நிலையாக நின்று   பூமியில் ஏற்படும்  சீதோஷண மாற்றங்கள் கணிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசர்களுக்கு  தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது

இது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமனாத்திற்கு தகவல் சொல்லும் “அநுக்கிரம ஷாபிதா” என்ற கருவி இருந்ததாக கௌதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்

“ரூப கார்ஷண ரகசியம்” என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின்  வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத்துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்



“தீஷமபதி” என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே “சதபிதா” என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள “அபஸ்மாராதாபம்” என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி “ஷர்ஷன்” என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பதில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் “திக்பிர தர்ஷண” ரகசியம் என்ற நூல் கூறுகிறது

இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன


பழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும்.  
அதற்கான பதில் எந்த புறக்கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம் அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்

பின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது, அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் , பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்தில் ஐயமில்லை



அந்த மந்திரத்தில் எனக்கு நல்ல பயிற்சிகளையும் அனுபவமும் குருஅருளால் உண்டு என்றாலும் அதை பகிரங்கப்படுத்த நான் விரும்பவில்லை,

இதை நான் இங்கே குறியிடுவதற்கு முக்கியமான காரணம் உண்டு, எந்த ஒரு விஷயத்தையும் பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன என்பதாலேயோ குருமார்கள் கூறுகிறார்கள் என்பதாலேயோ நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை அதை நடைமுறைப்படுத்தி முழுமையான அனுபவம் பெற்று திருப்தியுண்டான  பின்னரே ஏற்றுக் கொள்வது என் வழக்கம்

இதன் அடிப்படையில் ஆகாசாகாமினியை பிரயோகப்படுத்தி நான் சுயமாக அனுபவம் பெற்றதனால் சூட்சம சரீரத்தில் அயல்பிரதேசபயணம் என்பது அப்பழுகற்ற உண்மை என்பதை உறுதிப்பட என்னால் கூற இயலும்

அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள். நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை



நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்கûப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை, நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்,

செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கை பேரழிவுகளை எதிர் கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்

ஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள்,

அவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கலாம்.
 
 தகவல்.: யோகி ஸ்ரீராமானந்த குருஜி

இந்த url ஐ சொடுக்கவும்.
http://youtu.be/Y_PfhV_Hns4