Wednesday, July 28, 2010

திருவள்ளுவர் காசு.



திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசால் சென்னையில்
வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான  செய்தியாகும்.  கும்பினியார் வெளியிட்ட காசுகல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் 'விஷ்ணு'வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் 'விஷ்ணு' என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையிலிருந்து கும்பினி அரசு  வெளியிட்ட பல 'நட்சத்திர பகோடா' காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைகழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என்.முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். இந்நூலில்தான் முதன்முதலாக இங்கு குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் 'முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ' இருக்கலாம் என்று முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நாணயத்தைப் பற்றிய விவரங்கள் காசின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது. அவர் ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன. இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது. காசின் பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.




யார் இந்த முனிவர்?

காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாததாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்தவிதமான சின்னங்களும் காணப் படாததாலும் இவ்வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம். மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாளம் காண முடிகிறது. இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இவர் ஒரு ஆசானாகவோ பெரும்புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.

யார் இந்த முனிவர்?

இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.

எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்தரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்று ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது.

இந்த யூகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப் பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும் அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு.எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

காசின் காலம் இக் காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிதியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது.

1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.எல்லிஸ் துரையும் திருக்குறளும்அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.

எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப்பெறும் முன்னரே எல்லிஸ் துரை இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டு இருந்த போது தற்செயலாக விஷ உணவை அருந்தி அகால மரணமடைந்தார்.

அவர் இறந்த பின் வெளிவந்த அந்த நூலை மீண்டும் சிறந்த முறையில் ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார். இந்நூலில் எல்லிஸ் துரை முன்னூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள்களிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப்படுகிறது. இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற சங்க நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்னர் தினமணி சுடரில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.

Saturday, July 24, 2010

Population Density Chart


With the World Population Day just gone by (on July 11), here is the list of 20 most populated nations in the world and their population (as on 15 July 2010 or as indicated otherwise).
The population of the world is estimated to be around 6.8 billion and is expected to reach 25 billion by 2050.

1. China
Tops the list with a population of 1,338,650,000 which amounts to around 19.53% of the total world population. The figures are according to the statistics provided by the Chinese Official Population Clock excludes Hong Kong, Macau and Taiwan.

2. India
Comes next with a population of 1,183,416,000 which amounts to approximately 17.26% of the world population. The figures have been provided by the Indian Official Population Clock.

3. United States of America
A distant third with a population of 309,738,000 - roughly 4.52% of the total world population. The figures have been provided by the United States Official Population Clock.

4. Indonesia
Population of 234,181,400 which is around 3.42% of the total world population. The number is according to Statistics Indonesia provided in July 2010.

5. Brazil
Population 193,223,000 2.82% approx. of world population. The figure has been provided by the Brazilian Official Population Clock.

6. Pakistan
Population 170,013,500 2.48% approx. of world population, according to the Official Pakistani Population Clock.

7. Bangladesh
Population 162,221,000. The figure is an UN estimate and comes to 2.37% of the world population.

8. Nigeria
Population 154,729,000 (based on UN Estimate). 2.26% of the world population.

9. Russia
Population 141,927,297 (as on 1 January 2010, number provided by Federal State Statistics Service of Russia).

10. Japan
Population of 127,380,000 (as on 1 June 2010), Japan is 10th in the list. The figures have been provided by Official Japan Statistics Bureau.


11. Mexico
Population 108,396,211 (as per 1 July 2010 figure provided by INEGI and National Population Statistics of Mexico). This is roughly 1.58% of the world population.


12. Philippines
Population 94,013,200 (an estimated 1.37% of the world population) according to National Statistics Office medium projection.


13. Vietnam
Population 85,789,573 (1.25% of world population).


14. Germany
Population 81,757,600 (based on 1 January 2010 Eurostat estimate). This is only 1.19% of the world population.


15. Ethiopia
Population 79,221,000 (as per July 2008 statistics from Ethiopia Central Statistics Agency). The figure is equivalent to 1.16% of the total world population.


16. Egypt
Population 78,720,000 which is around 1.15% of the world population. The figures are from the Official Egyptian Population clock.


17. Iran
Population 74,196,000 (1.08% of world population). UN-estimated.


18. Turkey
Population 72,561,312 (as on 31 December 2009). This comes to around 1.06% of the world population. Turkish Statistical Institute.


19. Democratic Republic of Congo
Population 66,020,000 (0.96% of world population). UN-estimated population.


20. France
 Population of 65,447,374 (this is an Official INSEE estimate provided on 1 January 2010 and comes to 0.95% of the world population).

Wednesday, July 21, 2010

I love India

I love India. I know this is big country full of beauty. These 


http://youtu.be/X4uUaVaVAsg
images show us that. For now only I can tell you that these images are beautiful.
























Sunday, July 18, 2010

History of Indian flag



An Interesting fact to know – History of Indian flag

 Flag -1
The flag that was first hoisted on August 7, 1906, at the Parsee Bagan Square in Calcutta.in 1907 300x200 An Interesting fact to know – History of Indian flag

  


Flag-2
Called the ‘Saptarishi Flag’, this was hoisted in Stuttgart at the International Socialist Congress held on August 22, 1907.in 1907 300x197 An Interesting fact to know – History of Indian flag
                                                                                                                           














Flag-3

Associated with the names of Dr. Annie Besant and Lokmanya Tilak, this flag was hoisted at
the Congress session in Calcutta during the ‘Home Rule Movement’.
                                                                              













Indian Flag-4

In the year 1921, a young man from Andhra presented this flag to Gandhiji for approval. It was only after Gandhiji’s suggestion that the white strip and the charkha were added.  

 
Flag 5
This flag was suggested during the All India Congress Committee session in 1931. However, the Committee’s suggestion was not approved.

 




Flag-6

On August 6, 1931, the Indian National Congress formally adopted this flag, which was first hoisted on August 31.












Flag-7


Our National Flag, which was born on July 22, 1947, with Nehruji’s words, ‘Now I present to you not only the Resolution, but the Flag itself’. This flag was first hoisted at the Council Houseon August 15, 1947.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
The man who designed Indian Flag Tiranga versatile genius Lt. Shri Pingali Venkayya.
  





India’s flag is a tricolor standard, with bands of saffron, white, and dark green. The saffron represents courage, sacrifice, patriotism, and renunciation. It is also the color of the Hindu people. The green stands for faith, fertility and the land; it is the color of the Islam religion. The white is in the center, symbolizing the hope for unity and peace. In the center of the white band is a blue wheel with 24 spokes. This is the Ashoka Chakra (or ‘Wheel of Law’). The Chakra represents the continuing progress of the nation and the importance of justice in life. It also appears on the Sarnath Lion Capital of Ashoka ‘ .


Courtesy: Dr. M J Kapadia

Saturday, July 17, 2010

Thursday, July 15, 2010

பாரத ரத்னா.



பாரத ரத்னா விருது பெற்றோர்
     பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

     
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

     1954
ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

     
சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றோர் பட்டியல்
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2.
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3.
முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4.
முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5.
முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6.
ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7.
கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8.
முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9.
முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10.
புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11.
முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12.
முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13.
முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14.
லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்


15.
இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16.
வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17.
கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18.
ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19.
ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20.
கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21.
எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22.
முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23.
நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24.
ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25.
சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26.
மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28.
ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29.
சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31.
குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32.
அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33.
எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34.
சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35.
ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர
போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்


36.
ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37.
அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38.
கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39.
பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40.
லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா

41.
பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா

Thursday, July 8, 2010

Wikinews தளத்திலிந்ருது சூரியத் தூண்டல் (solar impulse)

 
சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்

Wikinews .தளத்திலிருந்து

http://bit.ly/dBQl40 வெள்ளி, ஜூலை 9, 2010
"சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும்சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது.
சூரியத் தூண்டல் சூரிய ஆற்றல்-விமானம்.
"தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் விமானநிலையத்தில் தரையிறங்கியது. சராசரியாக 25 மைல்/மணி வேகத்தில் 8,700 மீட்டர் உயரம் இவ்விமானம் இச்சோதனைப் பறப்பில் பறந்துள்ளது. விமானி மூலம் இயக்கப்பட்ட சூரிய ஆற்றலுடன் கூடிய விமானம் ஒன்று இவ்வளவு உயரம் பறந்ததும் இதுவே முதற் தடவையாகும்.



Cquote1.svg தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது. Cquote2.svg
—பேர்ட்ரான்ட் பிக்கார்ட், சூரியத் தூண்டல்
சுவிஸ் விமானப் படையின் முன்னாள் போர் விமானியான அந்திரே போர்சுபேர்க் என்பவரே இவ்விமானத்தை ஓட்டிச் சென்றார். "40 ஆண்டுகளாக நான் விமானியாகப் பணியாற்றுகிறேன். இந்த சோதனைப் பறப்பில் கலந்து கொண்டது எனது பணிக்காலத்தில் நான் பெற்ற அதிஉயர் சாதனையாக நான் கருதுகிறேன். மின்கலங்களில் ஆற்றல் அதிகரிப்பதை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். சூரியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். எரிபொருள் எதுவுமின்றி, சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் 26 மணி நேரம் நான் வானில் பறந்திருக்கிறேன்," என்றார் அந்திரே போர்சுபேர்க்.

இவ்விமானம் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வல்லது. இதில் 12,000 சூரியக் கலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இப்பயணத்தின் போது சில பின்னடைவுகளையும் சந்திகக் நேர்ந்துள்ளது. "17 மணி நேரப் பயணத்தின் பின்னர் சில பிரச்சினைகளை அந்திரே எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், விமானி அறையில் மிகவும் குளிராக (-20 பாகை செல்சியசு) இருந்ததாகவும் குறைப்பட்டுக் கொண்டார். குடிநீர் இதனால் உறைந்து விட்டதாகவும், அவரது ஐ-பொட் இயங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது."


"தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது," என சூரியத் தூண்டல் (
solar impulse) என்ற இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வளிமக்கூடு மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Good Morning! Believe It or Not!

Good Morning! Believe It or Not!
















Sunday, July 4, 2010

Saturday, July 3, 2010

தென்கோடிக் கண்டம்,




அண்டார்டிகா அறியாத தகவல்கள் - Antartica unknown facts

அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)

மூன்று மாதம் தூங்கி விழும்


துருவம் பூண்ட,


மூன்று மாதம்


கண்மூடா வெளிச்சம் கொண்ட


தென்கோடிக் கண்டம்,


இந்தியக் கண்டத்தின் தோழி!


பனிக்கண்டமாய்


தனிக்கண்டமாய்ப் பிரிவதற்கு முன்


தோளோடு தோள் சேர்ந்து


ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா,


தென் அமெரிக்கக் கண்டமுடன்


வேனிற் சோலையில்


விலங்கினம் உலாவிய


விந்தைக் கண்டம்!


'பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல யுகங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஓர் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாய் நகர்ந்து தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] ஊர்ந்து பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பல கண்டங்களில் காணப்படும் நிலத்துவ விலங்கினம், தாவர இனத்தின் பூர்வப் படிவப் பதிவுச் சான்றுகள் [Fossil Records] உறுதி அளிக்கின்றன '.


ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி (1880-1930)


முன்னுரை: 1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து: ஒரு காலத்தில் தென்பாதிக் கோளக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆஃப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் எல்லாம் பொதுவாகக் காணப்பட்ட பூர்வப் படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில், அவர் அவ்விதம் கூறினார். அந்தப் பெருங் கண்டத்திற்கு 'கோந்துவானா ' [Gondwana] என்று பெயரையும் வைத்தார்.


தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லெளரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்ஃபிரெட் வெஜினர் கூறினார். வட பகுதியான லெளரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா+ஆசியா (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து. முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு 'பங்கயா ' என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர். கிரேக்க மொழியில் பங்கயா என்றால் 'எல்லாம் நிலம் ' என்று அர்த்தம்.


1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சி கொண்டது! உலகின் 70% சுவைநீர்க் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்!


அண்டார்க்டிகா கண்டத்தின் பூர்வீக வரலாறு


500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் [Cambrian Era] அண்டார்க்டிகா கண்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் படுத்திருந்தது! பூமியின் உட்கருவில் கொந்தளிக்கும் திரவக் குழம்பின் மீது உலகக் கண்டங்கள் நகரும் போது, மெஸோசோவிக் யுகத்தில் [Mesozoic Era (65-250 மில்லியன் ஆண்டுகள்)] ஆஸ்திரேலியாவுடன் ஒட்டி யிருந்த அண்டார்க்டிகா கண்டம் தெற்கு நோக்கித் திசைமாறியது! அந்த யுகத்தில்தான் அநேக விலங்குகளும், சிலவித டைனோசார்ஸ்களும் வேனிற் தளமாய் இருந்த அண்டார்க்டிகாவில் நடமாடி வந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியாவை விட்டுப் பிரிந்து தென் துருவம் நோக்கிப் புலப்பெயர்ச்சி அடைந்தது.


நிரந்தரப் பனி மண்டலம் சூழ்ந்த அண்டார்க்டிகா கண்டம் தென்துருவப் பகுதியில் தற்போது தங்கியுள்ள ஒரு பனிக்கண்டம். உலகக் கண்டங்களில் ஐந்தாவது பெரிய அண்டார்க்டிகா அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் போல ஒன்றரை மடங்கு பெரியது! உலகிலே மிகப் பெரிய பாலை நிலத்தைக் கொண்டது அண்டார்க்டிகா! அதன் 98 சதவீதப் பரப்பில் பல்லாண்டுகள் உறைந்து போன பனித்தட்டுகளும், மீதி 2 சதவீதத்தில் மலட்டுப் பாறைகளும் கொண்டது. உலகின் மொத்தத் தொகையில் 90% அளவு பனிமண்டலம் அண்டார்க்டிகாவில்தான் சேமிப்பாகி உள்ளது. அண்டார்க்டிகாவின் தென் துருவம் உலகக் கண்டங்களிலே மிக்கப் பனிக்குளிரும், மிக்கப் பனிப்புயலும், மிக்க வரட்சியும் கொண்டது. இதுவரைப் பூமியில் குளிர் தணிந்து, 1983 இல் பதிவான அண்டார்க்டிகாவின் உஷ்ணம் -89 C (-128.6 F)! ஒவ்வொரு வருடத்திலும் அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான பகுதிகளில் தெளிக்கப்படும் சராசரி பனித்தூவல் 2 அங்குலத்துக்கும் குறைவுதான்!


அண்டார்க்டிகாவைக் கண்டுபிடிப்பதில் இருவர் போட்டி


1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! வட துருவத்தில் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அமெரிக்கத் தீரர் ராபர்ட் எட்வின் பியரி [Robert Edwin Peary (1856-1920)] முதன்முதலில் தடம் வைத்தார்! 1908 ஆண்டில் பிரிட்டாஷ் தேடுநர் குழுவின் தலைவனாய் இருந்த, ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் ஷாக்கில்டன் [Ernest Shackleton] அண்டார்க்டிகாவில் கால்வைத்துத் தென் துருவத்தை நோக்கிச் செல்லும் போது உணவுப் பண்டம் பற்றாமல், எதிர்த்து வரும் குளிர்காலப் பனிப்புயலின் தாக்குதலைத் தாங்க வலுவின்றி 97 மைல் தூரம் வரை சென்று மீள வேண்டியதாயிற்று. தென் துருவத்தில் யார் முதலில் தடம் பதிப்பது என்று போட்டி யிட்டு இரண்டு தீரர்கள் முயன்றனர். முதல்வர்: நார்வே நாட்டைச் சேர்ந்த ரோவால்டு அமுன்ட்சென் [Roald Amundsen (1872-1928)] ஒரு கப்பல் உரிமையாளரின் மகன். புதிய பிரதேசங்களைத் தேடுவதில் பயிற்சி பெற்றுக் கப்பலோட்டுவதிலும் திறமை மிக்கவர். அவர்தான் முதன்முதலில் வடமேற்குப் பனிக்கடலில் கப்பல் பயணம் செய்து, வடதுருவத்தில் தடம் வைக்க முதலில் முயன்றவர். இரண்டாமவர்: இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் [Robert Falcon Scott (1868-1912)].


ஒரு சில மாதங்களில் அடுத்து, அமுன்ட்சென்னும், ஸ்காட்டும் தமது வரலாற்று முக்கிய தென் துருவப் பயணங்களைத் துவங்கினார்கள். அவர்கள் இருவரும் முற்றிலும் வேறான பண்புகளைக் கொண்டவர்கள். ஸ்காட் மெலிந்த உடம்பும், கடுஞ்சினமும், கடிய உழைப்பும் கொண்டவர். தனது 42 வயதில் தென்துருவப் பயணத்தைத் துவங்கினார். அமுன்ட்சென் எளிமையும் நேர்மைப் போக்கும் உள்ளவர். வடதுருவம் தேடிச் சென்று ஆர்க்டிக் பிரதேசத்தில் மாண்டு போன பிரிட்டாஷ் தீரர் ஸர் ஜான் ஃபிராங்க்லின் [Sir John Frnaklin (1786-1847)] மீது, அமுன்ட்சென் சிறுவனாக இருந்த போது மதிப்பும் பெருமையும் கொண்டிருந்தார். மருத்துவப் படிப்பை 21 வயதில் விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் தேடுநராக விழைந்து பயிற்சியைப் பெற்றார். ஃபிரான்க்லினைப் பின்பற்றி ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று, சிரமங்களை அறிந்து வரத் தீர்மானித்து, சிறிது தூரம் பயணமும் செய்தார்.


இருவரிலும் நார்வேயின் வீரர் அமுன்ட்சென் தகுந்த, எடை குறைந்த சாதனங்களை எடுத்துச் சென்று வெகு திறமையாகத் தனது துருவப் பயணத்தைத் துவக்கினார். அமுன்ட்சென் வட துருவத்தில் தடம் வைக்க, கனடாவின் வடமேற்கு வழியில் [Northwest Passage] போகும் போது, எஸ்கிமோக்களுடன் பழகி அவர்கள் அணியும் தளர்ந்த தோலுடைகளை [Fur] உடுத்திப் பனி மண்டலத்தில் உலவிப் பயிற்சி எடுத்துக் கொண்டவர். காலில் பூட்டிய பனிச்சறுக்கிகள் எடை குன்றிதாய் இருந்ததால், வெகுநேரம் களைப்படையாமல் வழுக்கிச் செல்ல ஏதுவாய் இருந்தன. 1910 ஜூன் மாதம் முதல் தேதி ஸ்காட் குழுவினர் 'டெர்ரா நோவா ' (Terra Nova) என்னும் கப்பலில் 19 சைபீரியன் கோவேறு கழுதைகளை [Siberian Ponies] ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து லண்டனிலிருந்து நியூ ஸீலாந்துக்குப் புறப்பட்டார். ஸ்காட் தென் துருவம் செல்வதைக் கேள்விப்பட்டு, அமுன்ட்சென் வட துருவம் போகும் திட்டத்தை மாற்றி அவரும் தென் துருவப் போட்டியில் கலந்து கொண்டார். 1911 அக்டோபரில் அமுன்ட்சென் தென் அமெரிக்க முனையான ஹார்ன் [Cape Horn] வழியாக நான்கு உதவி ஆட்கள், 52 கிரீன்லாந்து நாய்களை ஏற்றிக் கொண்டு அண்டார்க்டிக் கடலை அணுகத் தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தார்.


ஸ்காட் அக்டோபரில் (1911) நியூ ஸிலாந்து வந்து சேர்ந்தார். அண்டார்க்டிக் பயணத்தில் ஸ்காட்டின் சைபீரியன் கழுதைகள் இரு மடங்குப் பொதி சுமந்ததால் பனிப்புயலில் இழுத்துச் செல்ல வெகு சிரமப்பட்டன. ஆனால் கிரீன்லாந்து பனியில் பழக்கப் பட்ட அமுன்ட்சென் நாய்கள், வெகு விரைவாக குறைந்த பளுவை இழுத்துச் சென்று, முதல் நான்கு நாட்களில் சுமார் 90 மைல்கள் கடந்தன! அமுன்ட்சென் துருவ முயற்சியில் வெற்றி பெற்று 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நார்வே தேசக் கொடியை, முதன் முதல் தென் துருவத்தில் நாட்டினார். ஸ்காட் ஒரு மாதம் கழித்து பின்புதான் 1912 ஜனவரி 17 இல் தென் துருவத்தை அடைந்தார். நார்வேயின் கொடியையும், அவருக்கு முன் வந்தடைந்த அமுன்ட்சென் ஸ்காட்டுக்கு விட்டுச் சென்ற கடிதத்தையும் கண்டு, ஸ்காட் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இறுதியில் திரும்பும் போது பனிப்புயலில் அவரும் அவரது குழுவினரும் சிக்கி மாண்டு போயினர். எட்டு மாதங்கள் கழித்து அவரகளது உடல்கள் காணப்பட்டு மீட்கப் பட்டன!


அண்டார்க்டிகா கண்டத்தின் இயற்கை அமைப்பு


தென்னமெரிக்காவின் தென்கோடி ஹாரன் முனையிலிருந்து சுமார் 600 மைல் தூரத்தில் அண்டார்க்டிகாவின் நீட்சித்தள [Antarctica Peninsula] முனை உள்ளது. பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சியைக் கொண்டது! அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்! உலகின் 70% சுவைநீர் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் ஃபான் பெல்லிங்ஸாசன் [Von Belling shausen (1778-1852)], பிரிட்டனின் எட்வெர்டு பிரான்ஸ்பீல்டு [Edward Bransfield (1795-1852)], அமெரிக்கன் நாதனீல் பால்மர் [Nathenel Palmer (1799-1877)] ஆகியோர் மூவரும் 1820 ஆம் ஆண்டில் அண்டார்க்டிகா கண்டத்தை முதன்முதலில் கண்டதாகக் கூறுகிறார்கள். அதன் நிலப்பரப்பு 5.5 மில்லியன் சதுர மைல் [14.2 மில்லியன் சதுர கி.மீடர்] விரிந்தது.


கிழக்கு, மேற்கு அண்டார்க்டிகா பகுதிகள் 1900 மைல் [3000 கி.மீடர்] நீளமுள்ள குறுக்கு அண்டார்க்டிக் மலைத் தொடரால் [Transantarctic Mountains] பிரிக்கப் படுகின்றன. உலகக் கண்டங்களில் கடல் மட்டத்தளம் சராசரி 6000 அடி உயர்ந்த அண்டார்க்டிக் பிரதேசம் போன்று பூமியில் வேறு எதுவும் கிடையாது! பனிச் சிகரத்தைத் துளைத்தெழுந்த மலைச் சிகரம் சுமார் 15,000 அடி உயரமுள்ளது!


1900 ஆண்டுகளில் பன்னாட்டுத் தேடுநர்களால் அண்டார்க்டிக் கண்டத்தின் உட்பகுதிகளும், அதைச் சுற்றி யிருக்கும் கடல்களும் விளக்கமாக அறியப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஏழு நாடுகள் புகுந்து, குடியாக்கிரமிப்பு ஆட்சியை [Colonial Claim] அண்டார்க்டிகாவில் துவங்கின. அகில உலக பூதளப் பெளதிக ஆண்டில் [International Geophysical Year (1957-58)] 12 நாடுகள், 50 குடியேற்ற தளங்களை ஆக்கிரமித்து, கூட்டாய்வு நிலையங்களை நிறுவகம் செய்தன. 1991 ஆண்டு ஒப்பந்தப்படி தாது உலோகங்கள் தேடும் திட்டங்கள் [Mineral Exploitation] இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டன.


அண்டார்க்டிகாவைப் பற்றித் தேடுநர் திரட்டியுள்ள பூதள விபரங்கள் மிக மிகக் குறைந்தவை. கிரஹாம் களம், விக்டோரியா களம் [Graham Land, Victoria Land] ஆகிய இரண்டையும் தவிர மற்ற களங்களின் பூதள விபரங்கள் இன்னும் அறியப் படாமலே இருக்கின்றன. உட்தளப் பகுதிகள் மீது நிரந்தரமாக தடித்த பனிப் போர்வை மூடி இருப்பதால், இந்த யுகத்தில் அவற்றின் தளப்பண்புகள் யாவும் ஆராயப்படப் போவதில்லை! 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காம்பிரியன் யுகத்துப் [Cambrian Era] பூர்வீகப் படிவங்கள், புராதனத் தேக்கப் புழுதிகள் [Fossils & Sediments] அண்டார்க்டிக் கண்டத்தின் தென்பகுதியில் கிடக்கின்றன. கிரஹாம் களத்தில் மெஸோசோவிக் யுகத்தின் ஜுராஸ்ஸிக் தாவரப் [Mesozoic Age Jurassic Flora] பூர்வப் படிவங்கள் காணப்படுகின்றன.


அண்டார்க்டிக்காவில் காணப்படும் பறவைகள், விலங்கினங்கள்


பிரம்மாண்டமான பனி மண்டலம் கொண்ட அண்டார்க்டிகாவில், கடும்பனியைத் தாங்கிக் கொள்ளும் ஆதிவாசி விலங்கினமும், தாவரச் செடிகளும்தான் [Primitive Indigenous Animals & Plants] பிழைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. கண்டத்தின் பூதளப் பரப்பு வெற்று நிலமாயினும், சுற்றியுள்ள கடலில் பலவிதப் பாலூட்டிகள் [Mammals], திமிங்கலம், சீல் மீனினம் போன்ற நீரினப் பிறவிகள் மிகவும் செழிப்பாக விருத்தியாகின்றன. நீரில் மிதந்து நீந்தும் இம்மி ஜந்துகள் [Microscopic Plankton] மற்றும் மாபெரும் திமிங்கலம் போன்றவை அண்டார்க்டிகா கடலில் காணப்படுகின்றன. ரோமத் தோல் கொண்ட [Fur] பாலூட்டியான பல்வகை சீல் நீந்திகள் [Elephant Seal, Leopard Seal, Ross Seal, Weddell Seal, Fur Seal, Crabeater Seal] அண்டார்க்டிகாவில் காணப்படுகின்றன.


அண்டார்க்டிகாவில் வாழும் பறவை இனத்தைச் சேர்ந்த பெங்குவின் புள்ளினங்கள் பறக்க முடியாமல் இருந்தாலும், நீரில் நீந்தும் திறமை பெற்றவை! பதினேழு வகையான பெங்குவின் புள்ளினங்கள் அங்கு வசிக்கின்றன. பெரும்பான்மையான காலம் அவை கடலில் மீன் பிடித்து உயிர் வாழ்கின்றன. அவற்றின் இறகுகள் தாமரை இலைபோல் தண்ணீர் ஒட்டாத தன்மை கொண்டு, மினுமினுப்பான ஒளியைக் கொண்டவை. உடலில் அவ்விதம் நீர் ஒட்டாததால், பெங்குவின்கள் தமது தோலை எப்போதும் வரட்சியாக வைத்துக் கொள்ள முடிகிறது. எல்லாப் பறவைகளையும் விட எண்ணிக்கை மிக்க இறகுகளை [ஒரு சதுர அங்குலத்தில் 70 இறகுகள்] பெங்குவின்கள் கொண்டவை. ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் பழைய இறகுகள் விழுந்து, புதிய இறகுகள் முளைக்கின்றன. எல்லா வகையிலும் பெரியதான ராஜாப் பெங்குவின் [Emperor Penguin] உயரம்: 3.7 அடி [1.1 மீடர்]. எடை: 65 பவுண்டு [30 கி.கிராம்]. எல்லா வகைப் பெங்குவின்களும் பெருத்த சிரசும், குறுகிய தடித்த கழுத்தும் கொண்டவை. அழகிய வளைவுகள் கொண்டு வழுக்கி விரைவாகப் பாய்ந்து நீந்துவதற்கு எளிதாக உதவும் படர்ந்த கால்களும் சிறகு போல் தள்ளும் இரட்டை விலாத் துடுப்புகளும் பெற்றவை.


அண்டார்க்டிக்காவில் காணப்படும் பூர்வப் படிவ மாதிரிகள்


தென்துருவப் பகுதியில் இப்போது இருக்கும் அண்டார்க்டிகா கண்டம், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் (Cambrian Era) பூமத்திய ரேகை அரங்கில் வேனிற்தளமாக இருந்து, பின்னால் அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து தெற்கு நோக்கி வந்தது! வெப்ப பூமியாக இருந்த காலங்களில் டைனசார்ஸ் போன்ற பலவித நிலத்துவ விலங்குகளுக்கு இருப்பிடமாக இருந்தது. இப்போது அவ்விதப் பூர்வீக விலங்கினங்கள் யாவும் மாய்ந்து போய், அவற்றின் பூர்வப் படிவ மாதிரிகள் மட்டும் புதைந்து கிடக்கின்றன. 2003 ஆம் ஆண்டு இறுதியில் ஜேம்ஸ் மார்டின் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் இறைச்சி தின்னும் டைனசார்ஸ் [Theropad] பூர்வ படிவ எலும்புகளைக் காண்டார்கள். ஆறு அல்லது எட்டடி நீளமுள்ள அந்த டைனசார்ஸ் மெஸோசோயிக் யுகத்தின் இறுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தது. 1994 இல் ஹாம்மர் குழுவினர் 20 அடி நீளமுள்ள, இறைச்சி தின்னும் ஜுராஸ்ஸிக் யுகத்தின் டைனசார்ஸ் [Theropad] ஒன்றின் எலும்புகளைக் கண்டார்கள்.


வில்லியம் ஹாம்மர் குழுவினர் 30 அடி நீளமுள்ள தாவரம் உண்ணும் டைனசார்ஸ் [Sauropad] ஒன்றின் 10 அடி அகண்ட இடை எலும்புகளை 2003 ஆம் ஆண்டு இறுதியில் கண்டார்கள். அது ஜுராஸ்ஸிக் யுகத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிலத்து விலங்கினம். தென் டகோடா பூதளக் காட்சி சாலையைச் சேர்ந்த ஜிம் மார்டின், வேகா-சிமோர் தீவுகளில் தாவரம் உண்ணும் டைனசார்ஸின் [Hadrosaur] பூர்வ படிவ எலும்புகளைக் கண்டார்கள். 1991 இல் மில்நர் குழுவினர் வேகா தீவில் தாவரம் தின்னும் டைனசார்ஸ் [Ornithopad] ஒன்றின் பூர்வ படிவத்தைப் பார்த்தார்கள். ஆலிவர் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் 1986 ஆம் ஆண்டில் தாவரம் புசிக்கும் டைனசார்ஸ் [Cretaceous Period Dinosaurs] ஒன்றின் எலும்புக் கூட்டைக் கண்டார்கள். இதுவே முதன் முதலில் அண்டார்க்டிகாவில் கண்டுபிடிக்கப் பட்ட டைனோசார்ஸ்.


25 மைல் அகண்ட, ஆழமான அடித்தட்டுப் பழுது [Deep Crustal Fault] இருப்பினும், எரிமலைகளே இதுவரை எழாத ஓர் அதிசயக் கண்டம், அண்டார்க்டிகா! அண்டார்க்டிகா குறுக்கு மலைத்தொடரில் இதுவரை எரிமலைகளே உண்டான தில்லை! ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா, ஆகிய முற்கால ஒட்டுக் கண்டங்களில் காணப்படும் பூர்வப் படிவ மரங்கள் [Glossopteris], நிலத்தில் ஊர்ந்திடும் விலங்கினம் [Lystrosaurus] அண்டார்க்டிகாவிலும் காணப்படுகின்றன. விஞ்ஞான ஆய்வாளர்கள் அண்டார்க்டிகா கண்டத்திற்கு விஜயம் செய்தாலும், பனிப்புயல்களும், பனிப் பொழிவுகளும் மிகையாகி மித மிஞ்சியக் குளிர்ப் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமான மனிதக் குடியேற்ற இல்லங்கள் எவையும் அங்கு கிடையா. வேனிற் காலத்தில் சுற்றுலா புரிந்து வந்து போகும் மாந்தர் [Seasonal Visitors] ஆண்டுக்கு சுமார் 4000 பேர் என்று கணக்கிடப் பட்டுள்ளது.




தகவல்கள்


1. Atlantic: Driving Continents Apart. Pacific The Vanishing Ocean -Reader 's Digest Atlas of the World [1992]


2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]


3. Earth 's Restless Crust -ABC 's of Nature, Reader 's Digest [1984]


4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader 's Digest Publication [1972]


5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)


6. Our Changing Earth By: Tusco Wilson Frontiers of Science, National Geographic Society [1982]


7. This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]


8. Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]


9. The Earth 's Fractured Surface By: National Geographic Society [1995]


10 Physical Earth By: National Geographic Society [1998]


11 The Shaping of a Continent, North America 's Active West [1995]


12 National Geographic Picture Atlas of our World [1990]


13 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]


14 Geographical Atlas of the World, Tiger Books International [1993]


15 Atlas of the World, Helicon Publication [2001]


16 Penguin Desk Encyclopedia of Science & Mathematics By: Bryan Bunch & Jenny Tesar [2000]


17 Unfolding the Universe By: Iain Nicolson [1999]


18 Antarctica Encyclopaedia Britannica [1978]


19 Antarctica, Britannica Concise Encyclopedia [2003]


20 The Frozen World, Encyclopedia of Discovery & Exploration By: Thayer Willis [1971]


21 Antarctica An Encyclopedia from Abbot Ice Shelf to Zooplankton (2002)


நன்றி - திண்ணை.காம் for